உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் கும்பாபிஷேகம்!

அனுப்பர்பாளையம் கும்பாபிஷேகம்!

அனுப்பர்பாளையம்: பிச்சம்பாளையம் பாலசஞ்சீவி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 29.5.15விமரி சையாக நடைபெற்றது.

திருப்பூர், பிச்சம்பாளையம் புதூரில் அமைந்துள்ள பாலசஞ்சீவி விநாயகர், அஷ்டாபுஜ துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம், மவுன சிவாச்சல அடிகள் தலைமையில், நடைபெற்றது; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காலை, 9:00 மணிக்கு மேல், சிறப்பு அபிஷேகம், நிவேத்தியம், தீபாராதனை, தச தரிசனம், பொது தரிசனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், வரும், 16வரை, மண்டலாபிஷேக பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை,திருப்பணி குழுவினர் மற்றும்
ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !