மனதை அடக்க சித்தர் பாடல்கள்!
ADDED :3952 days ago
மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதம் பற்றி பாம்பாட்டிச் சித்தர் ஞானக்கோவை என்ற நுõலில் விவரித்துள்ளார். நின்றாடு பாம்பே என்ற சொல்லோடு இவரது பாடல்கள் முடியும். இவர் மருதமலையில் வாழ்ந்தார். இங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை உள்ளது. மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் முதன்மையானது மூலாதாரம். இதில், குண்டலினி சக்தி பாம்பு வடிவில் சுருண்டு கிடக்கிறது. இந்த சக்தியை விழித்தெழச் செய்வதன் மூலம் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைய முடியும் என்கிறார் இவர்.