உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பதவி உயர்வு!

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பதவி உயர்வு!

மனத்துணிவுடன் செயலாற்றும் ரிஷபராசி அன்பர்களே!

ராசிக்குப் 11-ல் உள்ள கேது தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 2ல் கடகத்தித்தில் இருந்து சிம்மத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். ஜூலை 5ல் குரு 4-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானதல்ல என்றாலும், கடந்த காலத்தில் இருந்து பலன் மாறுபடும். எடுத்த முயற்சியை சிறப்பாக முடிக்கலாம். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

தொழில், வியாபாரத்தில் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்ற பீதி ஜூன் 28க்கு பிறகு மறையும். மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்கள் பணியில் கவனமுடன் இருக்கவும்.

கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர்.  எதிர் பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

விவசாயிகள் பழ வகைகள், பயறு வகைகள், எள் கரும்பு போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.

மாணவர்களுக்குச் சுமாரான நிலையே தொடர்கிறது. இன்னும் சில மாதத்தில் முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். புதனும் சாதகமாக இல்லாததால், போட்டியில் வெற்றி எளிதில் காண முடியாது.

பெண்கள் குதுõகலமாக இருப்பர். பிறந்த வீட்டில் இருந்து பொருள் கிடைக்கும்.  

நல்ல நாள்: ஜூன் 16, 19, 20, 21, 29, 30 ஜூலை 6, 7, 8, 9, 12, 13

கவன நாள்: ஜூலை 1, 2 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,7                    நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்: தினமும் சூரியனை வணங்குங்கள். செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். புதனன்று குலதெய்வத்தை வணங்கி, பசுவுக்கு ப”ந்தழையிடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !