உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) இனிய அனுபவம்!

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) இனிய அனுபவம்!

ஊக்கத்துடன் உழைத்திடும் கடகராசி அன்பர்களே!

ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜூலை 2ல் 2-ம் இடத்திற்கு வந்தாலும் நன்மையே அளிப்பார். 3-ல் உள்ள ராகுவாலும் நன்மையே. 11-ல் உள்ள புதன் ஜூன் 28 வரை நற்பலன் தர காத்திருக்கிறார். மற்ற கிரகங்களால் நன்மை காண முடியாது. எந்த விஷயத்திலும் விடா முயற்சி தேவைப்படும். மாத பிற்பகுதியில் புதனால் தடை உருவாகலாம். ஜூலை5ல் குருபகவான் 2-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான நிலை என்பதால், குருவால் ஏற்பட்ட துன்பம் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் இனிய அனுபவம் காண்பீர்கள். பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள். கணவன், மனைவி இடையே பாசம் மேலோங்கும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக அமையும். யாரிடமும் தொழில் விஷயமாக வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

பணியாளர்களுக்குப் பணிச்சுமை கூடும். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். தற்போது பிடிக்காததாக  இருந்தாலும், எதிர்காலத்தில் சாதகமாக அமையும்.

கலைஞர்கள் சிறப்பான நிலை பெறுவர். ஜூலை 2க்கு பிறகு ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியைப் பெற பொறுமை காக்கவும்.

மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் படிப்பில் கவனம் தேவை. ஜூலை 5ல் இருந்து குருவால் நன்மை அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறையிருக்காது. கால்நடை மூலமும் அதிக ஆதாயம் காணலாம்.

பெண்கள் குதுõகலமாக இருப்பர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை 3,4,5-ந் தேதிகளில் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: ஜூன் 16, 19, 20, 21, 24, 25,  ஜூலை  3, 4, 5, 10, 11, 12, 13

கவன நாள்: ஜூலை 6, 7 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,7                         நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்லுங்கள். ஆதரவற்றோருக்கு உதவுங்கள். நவக்கிரகங்களில் சூரியன், செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !