உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!

நியாயத்தை பின்பற்ற விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

ராசிக்கு 6ல் இருக்கும் கேது நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 2க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். புதன் ஜூன் 28 வரையும், ஜூலை15 க்கு பிறகும் சிறப்பான பலனைக் கொடுப்பர். குரு பகவான் ஜூலை 5ல் 11-ம் இடமான சிம்மத்திற்கு வருவது சிறப்பானது. முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கேதுவின் பலத்தால் அபார ஆற்றல் பிறக்கும். இதனால் தடைகளை உடைத்தெறிவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பீர்கள். ஜூன் 28 வரை முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஜூலை 2க்கு பிறகு பண வரவு கூடும்.

தொழில், வியாபாரத்தில் மாத பிற்பகுதியில் நல்ல வளர்ச்சி காணலாம். ஜூலை 5க்கு பிறகு தடைகளை
முறியடித்து முன்னேறுவீர்கள். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும்.

பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஜூலை15 க்கு பிறகு பணியில் சிறந்து விளங்குவீர்கள்.

கலைஞர்களுக்கு ஜூலை 2க்குப் பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும்.

மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஜூலை 15க்கு பிறகு போட்டியில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் அதிக மகசூலைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையை
சந்திக்கலாம்.

நல்ல நாள்: ஜூன் 19, 20, 21, 22, 23, 26, 27, 28  ஜூலை 1, 2, 10, 11, 16

கவன நாள்: ஜூன் 16. ஜூலை 12,13 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 6,7                    நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்: துர்க்கையை வழிபடுங்கள். தினமும் காலையில் எழுந்து சூரியனை வணங்குங்கள்.  விஷ்ணு, காயத்ரி, ஆஞ்சநேயரை வணங்குவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !