உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத நன்மை)

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத நன்மை)

வாக்குறுதியை நிறைவேற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

ராசிக்கு 11ல் இருக்கும் ராகுவால் நன்மை தொடரும். 9ல் இருக்கும் சுக்கிரன் ஜூலை 2 வரை ஆதாயம் அளிப்பார். புதன் ஜூன் 28 முதல் ஜூலை15 வரை வரை மிதுனத்தில் நின்று நற்பலன் கொடுப்பார். சூரியன் இந்த மாதம் சாதகமற்ற பலனையே கொடுப்பார். குருபகவான் ஜூலை 5ல் 10-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கிறார். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5-ம் பார்வை சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஜூன் 28க்கு பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை,அணிகலன் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஏற்படும்.

பணியாளர்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் வருந்த நேரிடும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். மாத பிற்பகுதியில் சிலர் இடமாற்றம் ஏற்படலாம். ஜூன் 22,23 ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். ஜூன் 28க்கு பிறகு கோரிக்கை எளிதில் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஜூலை 2க்கு பிறகு போட்டி அதிகமிருக்கும்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் காணப்படுவர்.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் நல்ல மகசூல் கொடுக்கும். பசுவால் ஆதாயமுண்டு. புதிய சொத்து வாங்க பொறுமை தேவைப்படும்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிறந்த வீட்டுச் சீதனம் கிடைக்க பெறலாம்.

நல்ல நாள்: ஜூன்16, 22, 23, 24, 25, 29, 30,  ஜூலை  3, 4, 5, 12, 13

கவன நாள்: ஜூன் 17, 18  ஜூலை 14,15 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7                            நிறம்: நீலம், பச்சை

பரிகாரம்: ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். விஷ்ணு, காயத்ரிதேவியை வணங்குங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !