உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) மனதில் உற்சாகம்)

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) மனதில் உற்சாகம்)

தன்னம்பிக்கையுடன் பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜூலை 2ல் சிம்மத்திற்கு மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் ஜூன் 28 வரையும் ஜூலை 15-ந் தேதிக்கு பிறகும் நற்பலன் கொடுப்பார். குரு ஜூலை 5ல் 9-ம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை குறுக்கிட்ட சிரமத்தில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். எதிரிகளும் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன் கிடைக்கும். சூரியன், செவ்வாயால் அடுத்தடுத்த தடை உண்டாகலாம். குடும்பத்தில் தேவையான வசதி கிடைக்கும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையே அவ்வப்போது பிணக்குகள் வரலாம்.  

தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். ஜூலை 15க்கு பிறகு புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும்.

பணியாளர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு காண்பர். வேலைப்பளு குறையும்.

கலைஞர்கள் பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.

அரசியல்வாதிகள் நற்பெயரோடு நல்ல பதவியும் கிடைக்க பெறலாம்.  

மாணவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால், போட்டிகளில் வெற்றி காண்பது அரிது.  

விவசாயிகள் சீரான மகசூலைப் பெறுவர். நெல், சோளம் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.  

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும்.   

நல்ல நாள்: ஜூன் 17,18, 24, 25, 26, 27, 28 ஜூலை 1, 2, 6, 7, 14, 15

கவன நாள்: ஜூன் 19, 20, 21 ஜூலை 16 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 7,9                   நிறம்: வெண்மை,மஞ்சள்

பரிகாரம்: ராமநாமம் ஜெபியுங்கள். ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்.  முருகனை வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !