உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) பெண்களால் நன்மை)

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) பெண்களால் நன்மை)

கலையுணர்வுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே!

சனி,கேது சாதகமாக இருந்து சிறப்பான பலனைத் தருவர். சூரியன், செவ்வாய் இணைந்திருந்து நன்மையளிப்பர். சுக்கிரன் ஜூலை 2ல் இருந்து நன்மையை வாரி வழங்குவார். புதன் ஜூன்28ல் இருந்து ஜூலை15 வரை நன்மை தருவார். குரு ஜூலை 5ல் 8-ம் இடத்திற்கு செல்வது சிறப்பானதல்ல. குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் பார்வை சாதகமாக உள்ளது. இதனால் வாழ்வில் தடைகளை முறியடித்து வெற்றி வழிகாண்பீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். புதனால் மேற்கொண்ட செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.  பெண்களால் நன்மை கிடைக்கும்.  

தொழில், வியாபாரம் சீரான பலனை எதிர்பார்க்கலாம். பகைவர்களின் இடையூறு மறையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிர்பாராத வகையில் பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  புதிய பதவியை கிடைக்க யோகமுண்டாகும்.

கலைஞர்கள் பெண்களால் ஏற்பட்ட துன்பம் அடியோடு விலகும். இதற்கு சுக்கிரன் ஜூலை 2ல் இடம் மாறுவதே காரணம். அதே பெண்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.

விவசாயிகள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். மானாவாரி பயிர்களில் நல்ல  மகசூலைக் காணலாம். கால்நடை மூலம் வளர்ச்சி காணலாம்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.  

பெண்களால் குடும்பம் சிறக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம்.

நல்ல நாள்: ஜூன் 19, 20, 21, 26, 27, 28, 29, 30  ஜூலை 3, 4, 5, 8, 9, 16

கவன நாள்: ஜூன் 22, 23 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2, 3, 9              நிறம்: பச்சை, செந்துõரம்

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஏகாதசியன்று விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகுகால பைரவர் பூஜையில் பங்கேற்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !