உடுமலை கோவிலில் சுதர்சன லட்சார்ச்சனை!
உடுமலை: உடுமலை, நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சுதர்சன லட்சார்ச்சனை, மகா சுதர்சனஹோமம் இன்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.
இன்று, காலை, 7:00 மணி முதல், வாசுதேவபுண்யாகம், அங்குரார்ப்பணத்தை தொடர்ந்து,
லட்சார்ச்சனை துவங்குகிறது. மதியம், 12:30 மணிக்கு, தீபாராதனையும், தீர்த்தப்பிரசாதம்
வழங்கப்படுகிறது. மாலை, 5:00 மணிக்கு, லட்சார்ச்சனை தொடர்கிறது.இரவு, 7:00 மணிக்கு, அக்னி பிரதிஷ்டையும், 9:00 மணிக்கு, தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
நாளை, காலை 7:00 மணிக்கு, நித்ய திருவாராதனம், லட்சார்ச்சனையும், காலை, 10:00 மணி
முதல் மதியம், 12:00 மணி வரை, சுதர்சன ஹோமமும், மதியம், 12:30 மணிக்கு, தீபாராதனையும் நடக்கிறது.
மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை லட்சார்ச்சனையும், 7:30 மணி முதல், 8:30
மணி வரை, சுதர்சனஹோமம், தீபாராதனையும் நடக்கிறது. வரும், 26ம் தேதி காலை, 6:30 மணி முதல் நித்ய திருவாராதனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை, 8:00 மணிக்கு, லட்சார்ச்சனை நிறைவடைகிறது. காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை,ஹோமம் நடக்கிறது.
காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம், அபிஷேகமும், மதியம், 1:00 மணிக்கு, தீபாராதனையும் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு,
சக்கரத்தாழ்வாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது.