உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக ஆண்டு விழா!

கும்பாபிஷேக ஆண்டு விழா!

திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு விழா, இன்று நடைபெறுகிறது.காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த ஆண்டு ஜூலை 4ல் கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு நிறைவு விழா, இன்று நடைபெறுகிறது.

இன்று மாலை 4:00 மணிக்கு, 108 மூலிகை பொருட்கள் கொண்டு, மாலை 5:30 மணிக்கு, மகா
வேள்வி நடக்கிறது. இதை தொடர்ந்து, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, கலச பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆகியன நடைபெறுகிறது.மாலை 6:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி
எழுந்தருளல் மற்றும் மலை மேல் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !