சுதர்சன ஹோமம் செய்வதன் நோக்கம் என்ன?
ADDED :3795 days ago
சுதர்சனம் என்பது திருமாலின் கையிலுள்ள சக்கரம். சக்கரத்தாழ்வாருக்கு உரிய இந்த ஹோமத்தில், “திருமாலே! உமதுசக்கராயுதத்தை அனுப்பி எம்மை விரைவாக காத்தருள வேண்டும்” என்று சுவாமி யிடம் வேண்டுவர். இதன் மூலம் மனக்குழப்பம் தீரும். எதிரி பயம் விலகும். ஆரோக்கியம் மேம்படும். செல்வ வளம் பெருகும். நீண்டஆயுள் அமையும்.வாகன சுகம்உண்டாகும்.