பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
ADDED :3795 days ago
பசு நம் தாய்க்கு ஒப்பானது. தம்மை வருத்தி தம் குழந்தையை ஒரு தாய் காப்பது போன்று பசு தமது கன்றுக்காக கொடுக்க வேண்டிய பாலை நமக்கு அளித்துக் காப்பாற்றுகிறது. ‘சுவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுர்தச’ என சாஸ்திரம் கூறுகிறது. ஈறேழு பதினான்கு உலகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கிறார்கள். எனவே நம்மால் இயன்ற வரை பசு பாதுகாப்பு செய்ய வேண்டும். பசுவிற்கு அரு கம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை பசுவின் ஒரு வாய் அளவாவது கொடுக்க வேண்டும். அ ருகம்புல் கொடுத்தால் பாபம் அகலும், அகத்திக்கீரை கொடுத்தால் சரிவர பிதுர்கடன் செய்யாத தோஷம் நீங்கும். வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம் கொடுத்தால் தரித்திரம் நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.