உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குட்டகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பாகலஅள்ளி கந்துகால்பட்டியில், குட்டகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், நேற்று முன்தினம், சக்தி அழைப்பு, முளைப்பாரி எடுத்தல், வாஸ்து பூஜை, கங்கை பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று அதிகாலை, நவகிரக ஹோமம், கணபதி ஹோமம், கோபுர கலச பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கடபூஜை, கோ பூஜை, சூரிய பூஜை, நாராயணன் பூஜை, வேத பாராயணம், காலை, 7.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தோக்கம்பட்டி பெருமாள் கோவில் ராமச்சந்திர ஆச்சாரியார் தலைமையில், பட்டாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !