குண்டுகுளம் திரு இருதய ஆண்டவர் ஆலய விழா
ADDED :3776 days ago
இளையான்குடி: குண்டுகுளம் திரு இருதய ஆண்டவர் ஆலய விழா பரமக்குடி வட்டார அதிபர் பாதிரியார் செபஸ்தியான் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. ஜூன் 27 மாலை 6.30 மணிக்கு தேவகோட்டை வட்டார அதிபர் பாஸ்டின் தலைமையில், பாதிரியார்கள் யாகு,ஞானதாசன்,ஜெயசிங், அருட்செல்வம்,நற்குணம்,மோசஸ், வரப்பிரசாதம்,பால்ராஜ்,இருதயராஜ் பங்கேற்ற கூட்டு திருப்பலி நடந்தது. இரவு 8மணிக்கு தேர்பவனி நடந்தது. இதில் மரியதாஸ்,ஜஸ்டின் மற்றும் பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். ஜூன்28ல் காலை 9மணிக்கு ராமநாதபுரம் வட்டார அதிபர் பாதிரியார் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்த நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டது. ஏற்பாடுகளை குண்டுகுளம் பங்கு பாதிரியார் ஜான் பிரிட்டோ மற்றும் பங்கு பேரவையினர் செய்தனர்.