வல்லகுண்டாபுரம் கோயிலில் 101 பவுனில் நேர்த்திக்கடன்!
ADDED :3781 days ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வல்லக்குண்டா புரம் முத்துமாரி அம்மனுக்கு பக்தர் ஒருவர் 101 பவுன் காசுமாலையை ÷ நர்த்திக்கடனாக செலுத்தினார். கூத்தம்பூண்டி வலசைச் சேர்ந்த டாக்டர் ராஜாமணி, சுதாராணி தம்பதியினர் வல்லக்குண்டாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர். அதன்பின், அவர்களுக்கு ரதின், லதிஸ்ரீ என்ற இரட்டையர் பிறந்தனர். தம்பதி தாங்கள் வேண்டிக் கொண்டபடி 101 பவுனில் செய்யப்பட்ட தங்க மாலையை நேர்த்திக் கடனாக முத்துமாரியம்மனுக்கு செலுத்தினர். இதையொட்டி 101 தவில் மற்றும் 101 நாதஸ்வர கலைஞர்கள் மங்கள இசையை இசைத்தனர். மேலும் 101 பேர் கொண்ட தேவராட்டமும் நடந்தது. விழாவை முன் னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.