உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னமநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழா!

சென்னமநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழா!

தாடிக்கொம்பு: திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியில், அபிஷ்ட வரத மகாகணபதி, காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ÷ காயில்களில் உற்சவ திருவிழா நடந்தது. கடந்த ஜூன் 23 அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு அபிஷேகங்கள்  நடந்தன. ஜூன் 26 அன்று விநாயகர் கோயிலில் பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும், 28-அன்று பொன்னர் சங்கர் கோயிலில் கிடா வெட்டு வழிபாடும்  நடந்தது. ஜூன் 30 அன்று, அம்மன் பெட்டி அழைத்து கண் திறப்பு செய்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, வாண வேடிக்கை நடந்தது. நேற்று அதிகாலை  அம்மன் கோயிலில் குடிபுகுந்தார். அதை தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், நேர்த்திக் கடன் செலு த்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் கங்கை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை  நாட்டாமை நாச்சப்பன், மற்றும் சந்திரகுமார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !