உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் சங்கல்ப மண்டபத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளால் ஆபத்து!

தேவிபட்டினம் சங்கல்ப மண்டபத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளால் ஆபத்து!

தேவிபட்டினம்: தேவிபட்டினம் சங்கல்ப மண்டபத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளால் மண்டபத்திற்கு ஆபத்து உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ளதால் நவகிரகங்களை வழிபட்டால், திருமண தடைநீ ங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இதற்காக பரிகார பூஜைகள் செய்யப் படுவதுடன், தர்ப் பணம், ஏவல் உள்ளிட்டவைகளுக்கும் பரிகார பூஜைகளும் இங்கு நடைபெறுவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும்  ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  அவர்களை நவக்கிரக கடற்கரைக்கு எதிரே உள்ள சங்கல்ப மண்டபத்தில் அமர வைத்து, பரிகார பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த மண்டபத்தின் சுவர் ஓரங்களில் ஆங்காங்கே மரக்கன்றுகள் முளைத்து, கட்டடம் சேதமடைந்து வருகிறது.  முற்றிலும் சேதமடையாமல் தடுக்க, அதில் முளைத்துள்ள மரக்கன்றுகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !