வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழா!
ADDED :3807 days ago
வடமதுரை: கொம்பேரிபட்டி காடையனூரில் விநாயகர், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உற்சவ திருவிழா நடந்தது.
அம்மன் கரகம் பாலித்தல், மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டியும் நேர்த்திக்கடன் செல்லுதல் என பலவித வழிபாடுகள் நடந்தன. கிராம மந்தையில் நடப்பட்டிருந்த கழு மரத்தின் உச்சியை எட்டி பிடித்த காடையனூர் சக்திவேல், எஸ்.குரும்பபட்டி மருதை ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முளைப்பாரி சகிதமாக கிராம மக்கள் மஞ்சள் நீராடி அம்மனை கங்கையில் விடும் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிந்தது.