உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை சிறப்பு திருப்பலி கொடியேற்றம்!

மானாமதுரை சிறப்பு திருப்பலி கொடியேற்றம்!

மானாமதுரை: இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலம் கட்டி முடிக்கப்பட்டு 121ம்
ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா
தொடங்கியது.

திருச்சி தூய பவுல் குருத்துவகல்லூரி பேராயர் சிங்கராயர் கொடியேற்றி சிறப்பு திருப்பலியை நடத்தினார். 4.7.15 ம் தேதி திருஇருதய பெருவிழா சிறப்பு திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் நடத்தி வைத்தார். இன்று மாலை ஆறு மணிக்கு சிறப்பு நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. விழாவை சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு பேராயர் ஜோசப்லூர்துராஜா நடத்தி வைக்கிறார்.நேற்று நடைபெற்ற திருஇருதய பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை ரெமிஜியஸ்,இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் மற்றும் செசல்ஸ் பேரவை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !