ஆதிபுத்திரகொண்ட அய்யனார் கோயிலில் முப்பழ திருவிழா!
ADDED :3773 days ago
சேத்தூர்: சேத்தூர் ஆதிபுத்திரகொண்ட அய்யனார் கோயிலில் ஆணி கடைசி வெள்ளியை முன்னிட்டு முப்பழதிருவிழா நடந்தது.நேற்று காலையில் பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சுவாமிக்கும் வீரமாகாளிஅம்மனுக்கும் பல்வேறு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தது.இரவில் ரெங்கா நாட்டியாலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திருவிழாவில் கலந்து கொண்டனர்.அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா பாதுகாப்பு ஏற்பாட்டை ராஜபாளையம் டி.எஸ்.பி தலைமையிலான காவலர்கள்,ஊர்காவல் படையினர் செய்திருந்தனர்.விழா ஏற்பாட்டை முதுநிலை தலைவர் சோமசுந்தரம்,நிர்வாக குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.