திருக்கணித முறைப்படி நேற்று குரு பெயர்ச்சி விழா!
ADDED :3777 days ago
சேலம்: மரவனேரி காஞ்சி சங்கர மடத்தில், திருக்கணித முறைப்படி நேற்று நடந்த குரு பெயர்ச்சி விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் மற்றும் லட்சுமி ஹயக்கிரீவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். குரு பெயர்ச்சி விழாவையொட்டி, அனைத்து மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டி ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவ ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.