ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடி தேரோட்ட ஆலோசனை
ADDED :3809 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்ஆடிப்பூர தேரோட்ட ஆலோசனை கூட்டம் செருக்கூர் மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடந்தது. ஆகஸ்ட் 8ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 16ல்தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு செய்யபட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கபட்டது. சிறப்பு பஸ்கள் இயக்குவது, மருத்துவம், தீயணைப்பு, பாதுகாப்பு ஆகியவை உட்பட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கபட்டது. விருதுநகர் எஸ்.பி., மகேஷ்வரன், தக்கார் ரவிசந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், சிவகாசி ஆர்.டி.ஓ., அமர்குஷ்வாகா மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராமாராஜா செய்திருந்தார்.