உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்குமா?

நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்குமா?

மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புனரமைப்பு பணிகள் தாமதமானதால், மூலவர் வழிபாட முடியா மல் பக்தர்கள் அதிருப்திஅடைந்து உள்ளனர். மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை கிராமத்தில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 108 வைணவ தலங்களில், 62வது தலமாக விளங்குகிறது. இக்கோவில், வழிபாட்டு நிர்வாக வகையில், இந்து சமய அறநிலையத் துறையிடமும், தொன்மையான பாரம்பரிய சின்ன வகையில், இந்திய தொல்லியல் துறையிடமும் உள்ளது.

எட்டு மாதமாக...: தொல்லியல் துறை, கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, கடந்த ஆண்டு இறுதியில் முடிவெடுத்தது. தொல்லியல் துறையின் பணிகளை, திருப்பணியாகவே கருதிய, அறநிலையத் துறை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பாலாலயம் செய்தது. இதையடுத்து, கடந்த எட்டு மாதங்களாக, மூலவர் வழிபாடு இன்றி, உற்சவ வழிபாடே நடைபெறுகிறது. இதற்கிடையே, மகாமண்டபத்தில் சேதமடைந்த, மேல்தள பீம் பகுதியை புனரமைக்கவும், கோவில் நிர்வாகம் சார்பில், தொல்லியல் துறைக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில், பாலாயம் நடந்து பல மாதங்களாகியும், இதுவரை புனரமைப்பு பணி துவக்கப்படவில்லை.

அதிருப்தி: இங்கு வரும் பக்தர்கள், மூலவர் ஆதிவராக பெருமாளை தரிசிக்க இயலாமல், அதிருப்தியடைந்து வருகின்றனர். புனரமைப்பு பணிகளை விரைவாக துவக்கி, கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !