உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மலைக்கோவிலில் நுழைவாயில் கோபுரம் விரிசல்

திருத்தணி மலைக்கோவிலில் நுழைவாயில் கோபுரம் விரிசல்

திருத்தணி: முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும், மலைப்படி நுழைவாயி லில் உள்ள கோபுரத்தின் ஒரு பகுதியில், விரிசல் ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, சரவணப்பொய்கை என்ற திருக்குளம் பகுதி யில் உள்ள, மலைப்படிகள் வழியாக நடந்து செல்கின்றனர்.இந்நிலையில், மலைப்படிகள் ஏறும் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், செடிகளும் வளர்ந்து வருவதால், கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்துவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், பக்தர்கள் அங்கு நுழைந்து செல்லும் போது, அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, கோவில் நிர்வாகம், விரிசல் அடைந்த கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !