உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைரியம் தரும் ராகவேந்திரர் ஸ்லோகம்!

தைரியம் தரும் ராகவேந்திரர் ஸ்லோகம்!

ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம்  படிப்போருக்கு மன தைரியம் அதிகரிக்கும்.

யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்
தீர்ணாம்புதிர் லீலயா
லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்
பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்!
அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்
தக்த்வா புரீம் தாம் புன:
தீர்ணாப்தி: கபிபிர்யுதே
யமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!

பொருள்: யாருடைய அருளின் வலிமையால் அனுமன் எந்தகளைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமனின் அன்புக்குரிய சீதையைக் கண்டாரோ, அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ, அட்சகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்றாரோ,  ராவணனைக் கண்டு இலங்கையை தீக்கிரையாக்கினாரோ, மறுபடியும் கடலைத் தாண்டினாரோ, மகேந்திர மலையில் இருக்கும் வானரங்களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ, அப்படிப்பட்ட ராமரை  வணங்குகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !