வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் 27ல் தொடக்கம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சேதுநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரம்மோத்ஸவம் ஆடி மாதம் 11ம் தேதி (27.7.2015) திங்கட்கிழமை தொடங்கி சிறபாக நடைபெற உள்ளது.
பிரம்மோத்ஸவ நிகழ்ச்சிகள்:
27.7.2015 (திங்கட்கிழமை) ஸ்ரீமன்மத வருஷம் ஆடிமாதம்11-ந் தேதி திங்கட்கிழமை
காலை: 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள்- பகவதனுக்ஞை, ஆச்சார்ய வருணம், ஸங்கல்பம், புண்யாஹவாசனம், விஷ்வக்கேஸன ஆராதனம், ம்ருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை, ரக்ஷாபந்தனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை.
காலை: 6 மணிக்கு மேல் 6.30 க்குள்- கடக லக்னத்தில் துவஜாரோஹணம் (கொடியேற்றம்)
28.7.2015 (திங்கள் முதல் 31.7.2015 வெள்ளி முடிய) ஆடி மாதம் 11ம்- தேதி முதல் 15-ம் தேதி முடிய தினமும்
காலை: 9.00 மணிமுதல்- யாகசாலை பூஜை, உத்ஸவ மஹா ஹோமம், பூர்ணாஹுதி, நிவேதனம், பலி சாதித்தல், ஹாரத்தி உத்ஸவருக்கு விசேஷ திருமஞ்சனம், நிவேதனம், ஹாரத்தி, சாத்துமறை தீர்த்த ப்ரசாத விநியோகம்.
ஆடி மாதம் 15-ம் தேதி (31.7.2015) வெள்ளிக்கிழமை
காலை: 9.00 மணிக்கு மேல்- 10.30 க்குள் கடக லக்னத்தில் திருமாங்கல்ய தாரணம்
1.8.2015- சனிக்கிழமை: ஆடி மாதம் 16-ம் தேதி
காலை: 7.45க்கு மேல் 8.20மணிக்குள்- உத்ஸவர் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளல்
காலை: 8.00 மணிக்கு மேல் உத்ஸவர் தாயாருடன் திருத்தேர் கண்டருளல்.
27.7.2015 திங்கட்கிழமை முதல் 31.7.2015 மற்றும் 2.8.2015 ஞாயிற்றுக்கிழமை முடிய தினசரி மாலை 7.00 மணியளவில் உத்ஸவர் திருவீதி எழுந்தருளல், 27.7.2015- திங்கட்கிழமை 1-ம் திருநாள் சேஷ வாகனம்ல 27.7.2015- திங்கள் மாலை: 5 மணி-ஆன்மீகச் சொற்பொழிவு: வீபிஷண சரணாகதி, நிகழ்த்துபவர்: திரு. அலங்காரம் ராஜகோபாலன், ஸ்ரீவி
28.7.2015- செவ்வாய்க்கிழமை 2-ம் திருநாள் ஹனுமந்த வாகனம்
28.7.2015- வத்திராயிருப்பு ராதே கிருஷ்ண பஜன் மண்டலியாரின் பஜனை பாடல்கள்
செவ்வாய் மாலை 4 மணி ஆன்மீகச் சொற்பொழிவு: பாடவல்ல நாச்சியார், மாலை 5 மணி நிகழ்த்துபவர்: திரு. ப. ராஜாராம், ஸ்ரீவி
29.7.2015- புதன்கிழமை 3-ம் திருநாள் கருட வாகனம்
29.7.2015- புதன் மாலை 5 மணி ஆன்மீகச் சொற்பொழிவு: சந்தான கோபாலன், நிகழ்த்துபவர்: குருகிருபாவனி திருமதி. ஸ்ரீதேவி விஜிபட்டர் ஸ்ரீவி
30.7.2015- வியாழக்கிழமை 4-ம் திருநாள் யானை வாகனம்
30.7.2015 வியாழன் மாலை 4 மணி டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் திரு. டி. இராஜகோபாலன் அவர்கள் தலைமையில் ஸ்ரீஸ்ரீமாதுரி ரமணா பக்த பஜனை குழாம் பஜனை
31.7.2015- வெள்ளிக்கிழமை 5-ம் திருநாள் காலை: 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்- திருக்கல்யாணம் மாலை: குதிரை வாகனம்
31.7.2015- வெள்ளி மாலை 4 மணி நாதஸ்வர கச்சேரி வில்லூர் திரு. உலகநாதன் குழுவினர்.
1.8.2015- சனிக்கிழமை 6-ம் திருநாள் உத்ஸவர் தாயாருடன் திருத்தேர்-வீதிஉலா
1.8.2015- சனி மாலை 7.00 மணி சிறப்பு நிகழ்ச்சி
இடம்: பிராமண கல்யாண மண்டபம், அக்ரஹாரம் நடுத்தெரு, கடலூர் ஸ்ரீஸ்ரீகோபி பாகவதர் குழுவினரின் பஜனை
2.8.2015- ஞாயிற்றுகிழமை 7-ம் திருநாள் ஸப்தாவர்ணம் பல்லக்கு உத்ஸவர் தாயாருடன் இரவு த்வஜா அவரோஹணம் அர்ச்சக கைங்கர்யர்களுக்கு மரியாதை
2.8.2015- ஞாயிறு இரவு 6-8 மணி இடம்: பிராமண கல்யாண மண்டபம், அக்ரஹாரம் நடுத்தெரு, திருமதி. பிரபாமோஹன்- பாட்டு, திருமதி. அனுஷா பத்ம சங்கர்- வயலின் திரு. எம். சர்வஜித் கிருஷ்ணா- மிருதங்கம்
27.7.2015 முதல் 2.8.2015 முடிய தினமும் காலை 9 மணிக்கு பந்தலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பக்தர்கள் அபிஷேகத்திற்குப் பால், தயிர், தேன் ஆகியவை கொடுக்கலாம்.
தொடர்புக்கு: ஸ்ரீசேதுநாராயணப் பெருமாள் சேவா ஸமிதி டிரஸ்ட், வத்திராயிருப்பு.