மலையாளக் கருப்பையா
ADDED :3786 days ago
மலையாளக் கருப்பையா சாமியே
மங்களங்கள் தரவேணும் - எங்கள்
குளத்தூர் கருப்பையா - சாமியே
குலநலம் காக்க வேணும்.
தொட்டியத்துக் கருப்பையா - சாமியே
துணைவந்து காக்கவேணும் - எங்கள்
முன்னோடிக் கருப்பையா சாமியே
முன்னேவந்து காக்க வேணும்
கொரட்டிவாழ் கருப்பையா சாமியே
கூடவந்து காக்கவேணும் எங்கள்
திட்டாணிக் கருப்பையா -சாமியே
உடன்வந்து காக்க வேணும்
கட்டுச் சோத்துக் கருப்பையா சாமியே
கருணையுடன் காக்கவேணும் - எங்கள்
உறங்காப்புலி கருப்பையா -சாமியே
உடன்வந்து காக்க வேணும்
வல்லம்பதிக் கருப்பையா சாமியே
வாழவழி காட்டவேணும் - எங்கள்
சந்தனத்துக் கருப்பையா -சாமியே
சந்ததிகள் காக்க வேணும்.