உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனசை சோணைக் கருப்பண்ண சுவாமி துதி!

பனசை சோணைக் கருப்பண்ண சுவாமி துதி!

காடனியில் வீற்றிருக்கும் எங்கள் குல தெய்வம்
காரைக்குடி நகரத்தாரின் கண்கண்ட தெய்வம்
தேவகோட்டை நகரத்தார்கள் தெரிசிக்கும் தெய்வம்
தெவிட்டாத தெள்ளமுதாம் எங்கள் குல தெய்வம்

காலில் சலங்கை கலகலென எங்கள் குல தெய்வம்
கடுகி வந்து அருள்புரியும் எங்கள் குல தெய்வம்
கருமுகில் அய்யனோடு கலந்துவரும் தெய்வம்
கணப்பொழுதில் பேய்கள் ஒட்டிக்காத்து நிற்கும் தெய்வம்

வற்றாத செல்வநலம் வழங்கி நிற்கும் தெய்வம்
வரமருளிக்குலம் காக்கும் எங்கள் குல தெய்வம்
முத்தான முத்துக்கருப்பர் எங்கள் குல தெய்வம்
முன்நின்று துணைசெய்யும் எங்கள் குல தெய்வம்

நம்பினோர்க்கு அருள்புரிந்து நலம் அளிக்கும் தெய்வம்
நன்மக்கட் பேர்கொடுத்து வாழ்த்தி நிற்கும் தெய்வம்
கையரிவாள் கொண்டிருக்கும் எங்கள் குல தெய்வம்
காடனிச்சோணைக் கருப்பய்யாநீ எங்கள் குல தெய்வம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !