விருதுநகர் இன்னாசியார் ஆலய விழா துவக்கம்!
ADDED :3732 days ago
விருதுநகர்: விருதுநகர் புனித இன்னாசியார் ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் பாதிரியார் பீட்டர் ராய் கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி , அன்பின் விருந்தும் நடந்தது. பாதிரியார் ஞான பிரகாசம், உதவி பாதிரியார் தாமஸ் எடிசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை 6மணிக்கு திருப்பலி, மறையுரை, நடக்கிறது. ஆக.,1 ல் புனித இன்னாசியார் தேர்பவனி நடக்கிறது. 2 ம் தேதி காலையில் திருவிழா திருப்பலி , மாலையில் கோடியிறக்கம் நடக்கிறது.