பகவதி அம்மன் கோவிலில் மருந்து திருவிழா!
எர்ணாகுளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத மருந்து தருதல் திருவிழா ஆக.17 வரை நடக்கிறது.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டதால் எங்கும் நோய் பரவியது. நோயிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள், அஸ்வினி தேவர்கள் எனப்படும் மருத்துவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அம்பிகையின் அம்சமான பகவதியம்மனைச் சரணடைந்து நிவாரணம் பெறக் கூறினர். தேவர்களும் அவ்வாறே செய்ய, அம்பிகை மனம் இரங்கி நேரில் தோன்றினாள். அஸ்வினி தேவர்களிடம் நோய் தீர மருந்து தயாரிக்க உத்தரவிட்டாள். மருந்து சாப்பிட்ட அனைவரும் பூரண குணம் பெற்றனர். இந்த சம்பவம் நடந்த தலமான நெல்லியக்காட்டில் பகவதியம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. நீண்டகால நோயால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள பகவதியை வழிபட்டு மருந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். கடந்த ஜூலை 17 முதல்மருந்து தருதல் நிகழ்ச்சி இங்கு நடக்கிறது. ஆக.17 வரை மருந்து தரப்படும்.