உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வி தரும் ஆடி பவுர்ணமி விரதம்!

கல்வி தரும் ஆடி பவுர்ணமி விரதம்!

ஆடி பவுர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. அன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து, காலையும் மதியமும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் சிவன் கோவிலில் உள்ள சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்த வேண்டும். தெய்வங்கள் குறித்த பாடல்களை மனமுருகி பாட வேண்டும். தெரியாதவர்கள் மற்றவர்களைப் பாடச் சொல்லி கேட்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடித்துக் கொள்ளலாம்.ஆடி பவுர்ணமி விரதம் அறிவை விருத்தி செய்யும்.மாணவர்கள் இதைக்கடைபிடித்தால் கல்வியில் சிறப்பர். அவர்கள் மூன்று வேளையும் எளிய உணவு சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !