விருத்தாசலம் மோகாம்பரி அம்மன் வீதியுலா!
ADDED :4057 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் மோகாம்பரி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் தென்கோட்டைவீதி ÷ மாகாம்பரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 17ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக கடந்த 24ம் தேதி பால்குடம், செடல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் 14ம் நாள் உற்சவமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிம்ம வாகனத்தில் மோகாம்பரி அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.