நவசக்தி மாரியம்மனுக்கு 14ம் ஆண்டு திருவிழா
ADDED :3816 days ago
புதுச்சேரி:புதுச்சேரி பேட்டையான்சத்திரம் நவசக்தி மாரியம்மன் கோவில் 14ம் ஆண்டு திருவிழா வரும் 6ம் தேதி துவங்குகிறது.திருவிழா 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. 7ம் தேதி காலை 6.30 மணிக்கு கரகத்துக்கு ஜலம் திரட்டுதலும், 7.30 மணிக்கு கரக ஊர்வலம் 10.00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. 8ம் தேதி மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.9ம் தேதி காலை 8.00 மணிக்கு புதிய திருத்தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. அன்று மாலை 7. 00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 9.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது.