54 அடி உயர கிரக சாந்தி கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி ஹோமம்!
ADDED :3751 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள 54 அடி உயர கிரக சாந்தி கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. மொரட்டாண்டியில், விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள 54 அடி உயர கிரக சாந்தி கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது.அதைத்தொடர்ந்து, கணபதிக்கு 1008 கொழுக்கட்டை நிவேத்தியம், சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதா சங்கர குருக்கள், கீதா ராம குருக்கள், நாகராஜ் அய்யர் செய்திருந்தனர். தொழிலதிபர்கள் திவாகர் பன்சல், ஜோதிகுமார் சவுத்ரி, அரவிந்த்குப்தா, கமல்சந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.