உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோவிலில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சேலம் கோவிலில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சேலம் : சேலம் குகை, மாரியம்மன், காளியம்மன் கோவிலில், நேற்று இரவு வண்டி வேடிக்கை கோலாகலமாக நடந்து. சேலம் குகை, காளியம்மன், மாரியம்மன் கோவிலில், கடந்த ஜூலை 21ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், ஆடிப்பெருவிழா துவங்கியது. கடந்த 5ம் தேதி கோவிலில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபாடு, அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. குகை புலிக்குத்து தெரு இளைஞர்கள் சார்பில், மோகினி அவதாரம் எழுந்த பெருமாள், சிவபெருமான் உடன் இணைந்து அய்யப்பனை உருவாக்கிய நிகழ்ச்சி தத்ரூபமாக வேடம் அணிந்து வரப்பட்டது.ஆண்டிச்செட்டி சாமுண்டி தெரு நண்பர்கள் சார்பில், முப்பெரும் தேவியர்களான, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி வேடம் அணிந்து தத்ரூபமாக காட்சியளித்தனர்.ஜிக்கா பக்கா நண்பர்கள் குழு சார்பில், கருடாழ்வார் கேள்விக்கு, மகாலட்சுமி, விஷ்ணு உடன் இணைந்து பதில் அளிக்கும் காட்சியுடன், வாகனம் வலம் வந்தது. அம்பலவாணசாமி கோவில் தெரு சார்பில், குபேரன், மனைவி பத்ரா தேவியுடன், மகாலட்சுமியிடம் ஆசீர்வாதம் வாங்கும் காட்சி வேடம் அணிந்து வரப்பட்டது.கருங்கல்பட்டி மினிடோர்லோடு மேன் ஆட்டோ சங்கம் சார்பில், எம தர்மனிடம் உயிர் பிழைத்த மார்க்கண்டேயன், சிவன், பார்வதியுடன் ஆசி பெரும் காட்சி வேடம் அணிந்து வரப்பட்டது.புராணக்கதைகளை விளக்கும் வகையில், 16 வண்டிகளில், வேடம் அணிந்து வரப்பட்டது. திருச்சி மெயின்ரோட்டில், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்காண பொதுமக்கள், வண்டி வேடிக்கையை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !