உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனந்தமுடைக் கருப்பர்

பனந்தமுடைக் கருப்பர்

(ஆறாவயல்)

ஆறாவயல் விட்டு இரண்டுகல் தொலைவிலே
சீராக வீற்றிருக்கும்.
அன்பான பனந்தமுடைக் கருப்பண்ணன் அருளையே
அன்றாடம் நாடி நிற்போம்.
மாறாத செல்வவளம் மங்காத நல்லறிவு
மழைபோல பொழிந்து வருவான்!
மேலான அவன் நாமம் மெய்யாகத் துதிப் போர்க்கு
மேன்மை போர் கோடி தருவான்!
கூரான வாளோடு தோதான அரிவாளும்
கொண்டவன் பனந்த முடையான்
குழந்தைகள் பெரியவர் சகலரின் நலத்தையும்
காப்பவன் பனந்த முடையான்
தீராத வினைகளை ஓரிரு கணங்களில் தொலைத்திடும்
அந்தத் தெய்வம்
அவனைத் தொழுகின்ற பேருக்குத் தெவிட்டாத
இன்பங்கள் தந்திடுவான் இல்லை ஐயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !