திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆடி கிருத்திகை!
ADDED :3747 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோவிலில், இன்று ஆடி கிருத்திகை உற்சவம் நடக்கிறது.
திருப்போரூர், கந்தசாமி கோவிலில், பரணி, கிருத்திகை ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடுகளும், சுவாமி வீதியுலாவும், ஆடி மாத கார்த்திகை நாளில் உற்சவமும், நடைபெறுகின்றன. ஆடி கிருத்திகை நாளான இன்று காலை, சுவாமி சிறப்பு தரிசனம்; பகல் 12:00 மணிக்கு, மூலவர்
அபிஷேகம்; மாலை 4:00 மணிக்கு, உற்சவர் அபிஷேகம்; இரவு 7:00 மணிக்கு, சுவாமி வீதியுலா
ஆகியவை நடைபெறுகின்றன.உற்சவத்திற்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால், கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.