உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் தீமிதி விழா!

பாகூர் தீமிதி விழா!

பாகூர்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவில் தீமிதி விழா நேற்று நடந்தது.
கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவில் தீமிதி விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன்
துவங்கியது.

தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடந்து வருகிறது. தீமிதி விழா நேற்று நடந்தது. காலை 9:30 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி-தெய்வானை சுவாமி வீதியுலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமி திருகல்யாண உற்சவம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில், புதுச்சேரி மற்றும் தமிழகப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !