கண்ணீர் விட்டு அழுது வேண்டினால் உடனே பலன் கிடைக்குமா?
ADDED :3722 days ago
மாணிக்கவாசகர் திருவாசகத்தில், அழுதால் உன்னை (கடவுளை) பெறலாமே என்று பாடியிருக்கிறார். ஞான சம்பந்தர்தேவாரத்தில், காதலாகி கண்ணீர் மல்கிஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது என்று பக்தியின் மகிமையைச் சொல்கிறார். உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் அருள் பதியும் என்பது அருளாளர் கண்ட அனுபவம். நமக்கும் அந்த அனுபவம் கிடைத்தால் பெரும் பாக்கியம்.