கூரம் சாமாத்தம்மன் திருவிழாவில் மாரியம்மன் வீதியுலா!
ADDED :3707 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூரம் பகுதி சாமாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று முன்தினம், மாரியம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கூரம் கிராமத்திலுள்ள சாமாத்தம்மன் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், ஆடி மாத திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. அன்று மாலை, பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இரவு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை, சாமாத்தம்மன் கோவிலில் இருந்து கரகம் எடுத்து, மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர்.நேற்று முன்தினம் பக்தர்கள் அலகு குத்தி கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அன்று இரவு, மாரியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.