குன்னத்தூர் அய்யனார் கோவில் 22ம் தேதி திருவிழா!
ADDED :3755 days ago
குன்னத்தூர்: குன்னத்தூர் அருகே பூலாங்குளம், குளத்தூர் அய்யனார் கோவில் திருவிழா, நாளை (22ம் தேதி) நடக்கிறது. கடந்த, 7ம் தேதி பூச்சாட்டுதலுடன், திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இன்று (21ம் தேதி) இரவில் கோவில் புகுதலும், நாளை காலை, 6 மணிக்கு அம்மை அழைத்தலும், 8 மணிக்கு பூங்குலை பொங்கலும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 12.30 மணிக்கு கிளிவேட்டை புறப்படுதலும், 1.30 மணிக்கு பொங்கல் மற்றும் கிடாய் வெட்டும், மாலை, 5 மணிக்கு கோவில் வீடு திரும்புதலும் நடக்கிறது. 24ம் தேதி மதியம், 12 மணிக்கு மாலை கழற்றுதலும், மறுபூஜையும் நடத்தப்பட்டு, விழா நிறைவடைகிறது.