உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில். இங்கு சிவன்,பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக இருந்து அருள் பாலிக்கின்றனர். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மார்கழி சித்திரை, ஆவணி மாதங்களில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேளதாளம் முழங்க தந்திரி சங்கர நாராயணரரு கொடியேற்றினார். தொடர்ந்து விழா 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது. 30ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் மாலை நான்கு மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய நான்கு ரதவீதிகளில் உலா வருகின்றனர். 31ம் தேதி ஆராட்டு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !