செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருமுறை பாடல் பயிற்சி துவக்கம்!
ADDED :3712 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருமுறை பாடல் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம், செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், திருநாவுக்கரசர் திருமடம் மற்றும் கோவை மணிவாசகர் அருட்பணி மன்றம் இணைந்து இளையவர்களுக்கான திருமுறை பாடல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், சார்பு நீதிபதி விஜயகாந்த் முன்னிலையில் நேற்று காலை துவங்கியது. பிரதி ஞாயிறு தோறும் காலை 9:00 மணிமுதல் 11:00 வரை நடக்கும், இப்பயிற்சியை கோவை மணிவாசகர் அருட்பணி ஓதுவார் கோகுல கிருஷ்ணன் நடத்துகிறார். பன்னிரு திருமுறை பாடல்கள் அனைத்தும், பாடல் வடிவில் நடத்தப்படுகிறது. திருநாவுக்கரசர் திருமடத் தலைவர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.