உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த சிவன் கோவில்!

சிதிலமடைந்த சிவன் கோவில்!

உத்திரமேரூர்: ஒழையூரில் உள்ள சிவன் கோவில் பராமரிப்பின்றி, சிதிலமடைந்து காணப்படுகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்துள்ளது ஒழையூர் கிராமம். இங்குள்ள சிவன் கோவில் பராமரிப்பு  இல்லாததால், 50 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. அதன் பிறகு மீண்டும் இக்கோவில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில், ‘கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலின் முன் பகுதி மண்டபம் இடிந்து விழுந்தது. கோவிலை மீண்டும் சீரமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தேவையான பொருளுதவி கிடைக்காததால் தாமதமாகி வருகிறது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !