மூணு ரகசியம்!
ADDED :3811 days ago
வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாவில் இடம்கொடுத்தார். அதனால், அவளுக்கு நாமகள் என்று பெயர். படித்ததின் அடையாளம் நல்லதை மட்டும் பேச வேண்டும், ஒருவரின் படைப்பாற்றல் நன்மைக்கு மட்டும் பயன்பட வேண்டும் என்பது தான். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி திருமாலின் மார்பில் குடியிருக்கிறாள். பொருள் தேடுபவன் நல்ல இதயம் படைத்தவனாக இருக்கவேண்டும். செல்வந்தர்கள் இரக்கமுள்ளவர்களாக மற்றவர்க்கு உதவவேண்டும் என்பதை லட்சுமி உணர்த்துகிறாள். வீரம் என்பது உடல் முழுதும் பரவியிருக்க வேண்டும் என்பதற்காக வீரத்தை வழங்கும் பார்வதி சிவனின் தலை முதல் பாதம் வரை சரிபாதியாக (அர்த்தநாரி) வீற்றிருக்கிறாள்.