உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் ரூ.7.90 கோடியில் கோயில் திருப்பணிகள்: ஜனவரியில் கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரத்தில் ரூ.7.90 கோடியில் கோயில் திருப்பணிகள்: ஜனவரியில் கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 2016 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த, ரூ. 7.90 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இலங்கை மன்னன் ராவணனை ராமர் கொன்றதால் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க, ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கம் உருவாக்கி பூஜை செய்து, புனித நீராடி சிவனை வழிபட்ட இடத்தில் உருவானதால் ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் கடந்த 5.2.2001 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், கடந்த 2013 ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம், புதியதாக கட்டப்படும் வடக்கு, தெற்கு ராஜ கோபுர திருப்பணிகளில் தடங்கல் ஏற்பட்டதால் தள்ளிபோனது. வரும் 2016 ல் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், ஜனவரியில் ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்திட மாநில அரசு உத்தர விட்டது. இதனால், கோயில் திருப்பணிகள் முருகு6 மாதமாக முழுவீச்சில் நடந்து வருகிறது.

கோயில் கிழக்கு ராஜகோபுரத்தில் மராமத்து பணிகள் ரூ. 25 லட்சத்திலும், மேற்கு ராஜகோபுரம் ரூ 12 லட்சத்திலும், வடக்கு, தெற்கு புதிய ராஜகோபுரங்கள் ரூ. 3.71 கோடியிலும், பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி முகப்பு கருங்கல் மண்டபம் ரூ. 1 கோடியிலும், முதல் பிரகாரம் பழமை மாறாமல் வாட்டர் வாஷ் செய்து, வார்னிஷ் பூசுதல், மூன்றாம் பிரகாரம் மராமத்து வர்ணம் பூசுதல் பணிகள் ரூ. 2 கோடியிலும், சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர்கள், சுப்பிரமணியர்கள், அனுமான், நடராஜர், மகாலட்சுமி, சேதுமாதவர், பைரவர் சன்னதி விமானங்கள், நந்தி மண்டபம் ரூ. 75 லட்சத்திலும் நடந்து வருகிறது. மொத்தம் ரூ. 7.90 கோடியில் நடக்கும் இப்பணிகளில் 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் 4 மாதங்களில் முடிந்து விடும். அதன்பின், ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த, தேதி குறிப்பிடப்படும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !