உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை பொன்னியம்மன் கோவில் திருவிழா

ஊத்துக்கோட்டை பொன்னியம்மன் கோவில் திருவிழா

ஊத்துக்கோட்டை: பொன்னியம்மன் கோவிலில் நடந்த மூன்று நாள் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, கரகம்பாக்கம் கிராமத்தில் உள்ளது பொன்னியம்மன் கோவில். இங்கு, இந்தாண்டு, கடந்த 5ம் தேதி, திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, கிராம பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூன்று நாளும் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !