உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் ராஜகோபால சுவாமி வீதியுலா!

விருத்தாசலம் ராஜகோபால சுவாமி வீதியுலா!

விருத்தாசலம்: கிருஷ்ண ஜெயந்தியொட்டி, ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடந்தன. விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் காலை பெருமாள், தாயார், கருட பகவான், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7.00 மணியளவில் கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். அதன் பின் நடந்த உறியடி, வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இரவு 8.30 மணியளவில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

அதேபோல், மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4.00 மணிக்கு உறியடி உற்சவம், தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. மங்கலம்பேட்டை: மு.பருர் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மங்கலம்பேட்டை அடுத்த மு.பருர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை 10.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !