உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்லில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா

நாமக்கல்லில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா

நாமக்கல்: நாமக்கல்லில் நாளை (செப்.,12) கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுவதாக, சேலம் இஸ்கான் கோவில் நிர்வாகி ஸ்ரீநிவாச கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நாமக்கல் சுப்புலட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடக்கிறது. பக்தர்களை காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கிருஷ்ணர் அவரிதரித்தார். அவர் அவதரித்த அந்த திருநாளை உலக மக்கள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல பெயர்களில் கொண்டாடி வருகின்றனர். நாளை மாலை, 6 மணிக்கு விழா துவங்குகிறது. தொடர்ந்து பஜனையும், 7 மணிக்கு கிருஷ்ண கதாவும், 8 மணிக்கு கேள்வி பதில், அதனைத் தொடர்ந்து, 8.30 மணிக்கு அபிஷேகம், 9 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை, 6.30 மணி முதல் இரவு, 8.30 மணி வரை சத்சங்க நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 944 350 02 70 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !