உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிள்ளை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

கிள்ளை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

கிள்ளை: தில்லைவிடங்கன், பின்னத்துார் மற்றும் கொடிப்பள்ளம் சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கிள்ளை அடுத்த  தில்லைவிடங்கன் ஸ்ரீபர்தவம்பாள் சமேத விடங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நேற்று முன் தினம்  நத்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.  ஓய்வு பெற்ற மீன்வள ஆய்வாளர் புண்ணிய ராஜா, தில்லை மணிமாறன் சிவபுராண சொற்பொழிவாற்றினார். அர்ச்சகர் ஜெகதீச குருக்கள் பூஜைகளை செய்தார்.  கோவில் தர்மகர்த்தா ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். இதேப்போன்று கொடிப்பள்ளம் பள்ளமுடையார் சிவன் கோவில், பின்னத்துார் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷத்தில்  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !